கருப்பையில் கட்டி கரைய இயற்கையான சித்த மருத்துவம்! PCOS/PCOD ya, Neerkatti ya அவசியம் பார்த்து பயன் பெறுங்கள்.
நீர்க்கட்டி கரைய என்ன செய்யலாம்?
நீர்க்கட்டி வர காரணம்
நீர்க்கட்டி கரைய மருந்து..!
கருப்பை கட்டி கரைய கஷாயம்:-
இயற்கையான முறையில் இந்த கருப்பை நீர் கட்டி கரைய கஷாயம் தயார் செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.
கஷாயம் செய்ய தேவையானவை:
- கருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
- காய்ந்த வேப்பிலை – 10
கஷாயம் செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள். பின் அரைத்த பொடியினை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி 2 மணிநேரம் நன்றாக ஆறவிடவும். பின் கஷாயத்தை வடிகட்டி கொள்ளுங்கள்.
அருந்தும் முறை:
கர்ப்பப்பை கட்டிகள் கரைய தினமும் காலை உணவு உண்டபிறகு 1 மணி நேரம் கழித்து இந்த கஷாயத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அருந்தி வர வேண்டும்.
பயன்கள்:
இந்த கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வருவதினால், கருப்பை நீர் கட்டி கரைய ஆரம்பிக்கும், அதோடு மாதவிடாய் பிரச்சனை சிறக்கும், இதனால் கருத்தரிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளது.
மலைவேம்பு இலைகள்:
மலைவேம்பு கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்யும் ஒரு சிறந்த தாவரமாகும். எனவே கருப்பை நீர் கட்டி கரையை மலைவேம்பு இலைகளை ஒரு கொத்து எடுத்து நன்றாக மைபோல் அரைத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருக வேண்டும்.
கர்ப்பப்பை கட்டிகள் கரைய மலைவேம்பு காசாயம் அருந்தும் முறை:
மாதவிடாய் வாய்ந்த முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் வரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த முறையை முதல் மூன்று மாதங்களை வரை தொடரலாம். இவ்வாறு செய்வதினால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.
இந்த கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயம் கருப்பை நீர் கட்டிகள் கரைய ஆரம்பிக்கும்.




Very useful message..
ReplyDeleteஆதரவுக்கு நன்றி
DeleteShare more posts like this
ReplyDeleteநிச்சயமாக, ஆதரவுக்கு நன்றி
Delete